Thursday 22 January, 2009

பொங்கல் பண்டிகை தொடர்பாக நிகழ்வுகள்.
கலிஃபோர்னியா மாகாணம், அமெரிக்கா:

பொங்கலும் தேங்க்ஸ்கிவிங்கும் ஒன்றுதான்

இங்குள்ள வளைகுடாப் பகுதியில் (Bay Area) வசிக்கும் தமிழ் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் , செயிண்ட் ஜோசப் சர்ச் வளாகத்தில், ஜனவரி 14 அன்று பொங்கல் என்ற “இந்திய நன்றி தெரிவிக்கும் நாள்” (Indian Thanksgiving) விழாவைக் கொண்டாடினர். இப்பகுதி தமிழ் கிறிஸ்தவத் தலைவரான சுந்தர் வின்சென்ட் பொங்கல் பற்றிக் கூறுகையில் “Pongal is a harvest festival, the Tamil equivalent of Thanksgiving” என்று குறிப்பிட்டார். விசேஷ சுவிசேஷ பிரார்த்தனை மற்றும் “விசேஷ இந்திய விளக்கு” ஏற்றுதல் மற்றும் இரவு உணவுடன் விழா முடிவடைந்தது. இதுபற்றி அவர் அமெரிக்கப் பத்திரிகைகளிடம் மேலும் கூறுகையில், “உலகெங்கும் பல தேசங்களில் 90 மில்லியன் தமிழ் மக்கள் வாழ்கின்றனர். அப்போஸ்தலர் புனித தாமஸ்தான் தமிழ் பேசும் இந்தியர்களுக்கு கடவுள் பற்றிய நற்செய்தியை முதன்முதலில் சொன்னார். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அவர் கொல்லப் பட்டார்” என்றார்.
“சென்னையில் உள்ள புனித தாமஸின் கல்லறைக்கு ஏராளமானவர்கள் தினமும் வந்து செல்கின்றனர். தமிழ்ப் பொங்கல் (Tamil Pongal) புதிய நம்பிக்கையை அனைவருக்கும் அளிக்கும்” என்றார் அவர். இவ்விழாவில் Bishop Patrick J. McGrath, Father William Rosario, Father Oscar D. Tabujara, Father Robert B. Moran ஆகிய உள்ளூர் (அமெரிக்க) கிறிஸ்தவப் பங்குத் தந்தைகள் மற்றும் பல கிறிஸ்தவத் தலைவர்களும் பங்கு கொண்டனர்.

(நன்றி: http://www.dsj.org) source-tamilhindu.com

No comments: