கர்நாடக இந்து-கிறிஸ்தவ மோதல்கள்: மூலகாரணம் என்ன?
~ ராஜா ஆர்.எஸ் source: tamilhindu
கர்னாடகாவில் கடந்த சில நாட்களாக மதக் கலவரம் தலை தூக்கியுள்ளது. கிறித்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டு வருகின்றதாக வரும் செய்திகள் நம்மை கவலையுறச் செய்கின்றன. இந்த தாக்குதல்களில் சில இந்து அமைப்புகள் ஈடுபட்டிருக்கின்றன என்று கிறிஸ்துவ அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. பொதுவாக இந்துக்கள் மதத்தின் பேரில் அடித்துக்கொள்வதை விரும்பாத ஒரு சாதுவான சமுதாயம். மற்ற மதத்தவரின் வழிப்பாட்டுத் தலங்கள் தாக்கப்படுவதை நாம் கண்டிக்கிறோம். ஆனால் உண்மையில் அங்கு என்ன நடந்தது? நிகழ்ந்தவைகளுக்கு அடிப்படைக் காரணம் என்ன? யாருக்கு என்ன கோபம் ?..
எனக்கு கிடைத்த சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.
சமீபத்தில் ஒரிஸ்ஸாவில் ஒரு மரியாதைக்குரிய இந்துத் துறவி - சுவாமி லக்ஷ்மனானந்தா அவர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதின் விளைவாக பெரிய அளவில் அங்கே மதக் கலவரம் வெடித்தது. அதன் எதிரொலியாகத்தான் கர்னாடகாவிலும் கிறிஸ்தவ சர்ச்சுகள் மீது தாக்குதல்கள் நடக்கின்றன என்றுதான் முதலில் நினைக்க தோன்றியது. ஆனால் நடந்த விஷயங்கள் வேறு. மங்களூரை ஒட்டிய பகுதிகளில் புதிதாக முளைத்திருக்கும் ஒரு மதமாற்றக் கும்பல் “வாலாட்டியதே” இத்தனைப் பிரச்சனைக்கும் மூல காரணம் என்பது தெளிவாகத் தெரிய வந்துள்ளது.
“சத்ய தர்ஷினி” என்று ஒரு புத்தகம். அதில், இந்து கடவுள்கள் மீது வீசப்பட்டுள்ள தரக் குறைவான, சொல்லக் கூசும் தாக்குதல்கள். இவைதான் அங்கே மதக் கலவரத் தீயை மூட்டி விட்டுள்ளன.

மங்களூரில் இயங்கி வரும் “நியு லைஃப் ட்ரஸ்ட்” (New Life Trust) எனப்படும் கிறுத்தவ அமைப்பு அந்தக் கன்னட புத்தகத்தை மக்களிடையே விநியோகம் செய்துள்ளது. அதில் பரம்பொருளின் திருவுருவாக நாம் அனைவரும் கருதி வழிபடும் சிவபிரான், இராமர், கிருஷ்ண்ர், தேவி ஆகிய தெய்வங்கள் பற்றி கேவலமான சொற்களால் தரக்குறைவாக விமரிசித்திருக்கிறார் நூலின் ஆசிரியர்.
அந்தப் புத்தகத்தில் கண்டுள்ள வசனங்களில் சில இதோ…( இவற்றை இங்கே குறிப்பிடுவதே வேதனையாக இருக்கிறது. ஆனால் மக்களுக்கு இந்தத் தகவல்கள் போய்ச் சேர வேண்டியுள்ளதால் இடுகிறேன். மன்னிக்கவும் ):
“நாராயணனின் புதல்வியான ஊர்வசி ஒரு வேசி. அவளுடைய மகன் தான் வசிஷ்டர். இப்படிப்பட்ட வசிஷ்டர் தான் இந்து கடவுளாகிய இராமனுக்கு குரு.”
“சீதையை கடத்திச் சென்றது பிரம்மா. இப்படிப்பட்ட ஆசைகளுக்கு அடிமைகளான சிவன்,விஷ்ணு, பிரம்மா போன்றவர்களை கடவுள் என்று அழைப்பது பெரிய பாவம்.”
“கடவுளே ! கிருபை கூர்ந்து இந்தியர்களான பாவிகளை விடுவியும். அவர்கள் கேவலமான உறவுகள் (’விபசாரம்’) வைத்துள்ள கடவுள்களை வழிப்பட்டு வருகின்றனர்.”
“கிருஷ்ணர் என்பவர் ஒரு கீழ்த்தரமான நபர். இவரை வழிபடும் மூடர்களை விடுவிப்பது (அதாவது மதமாற்றம் செய்வது) நம் கடமை.”
இந்த “சத்திய தர்ஷினி” புத்தகத்தை முதலில் எழுதியது சூரியநாராயண ராவ் என்ற “இந்து பெயர் தாங்கிய” ஒரு ஆந்திர கிறிஸ்தவர். அவர் “அருளியதை” கன்னடத்தில் ராம ரெட்டி என்பவர் மொழி பெயர்த்துள்ளார்.
இந்த புத்தகத்தை New Life Trust அமைப்பு, மத மாற்ற பிரச்சாரத்திற்காக விநியோகம் செய்யப் போய் அது தான் இப்பொழுது கலவரத்திற்கு காரணியாகியுள்ளது.
கிறிஸ்தவர்கள் ஒன்றும் சாதுக்கள் அல்ல. அவர்கள் தரப்பிலிருந்து போலீஸ் மீது மிகக் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கிறது.
இந்தத் தகவல்களை நமது அறிவு ஜீவி செய்தி நிறுவனங்கள் வழக்கம் போல் கண்டு கொள்ளவில்லை. மதச்சார்பின்மை என்பது இந்துக்களுக்கு மட்டும் தானே? சிறுபான்மையினர் என்பவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இத்தாலியிலிருந்து அமெரிக்கா வரை, அவர்களைப் பற்றி கவலைப்பட பல நாடுகள் உள்ளன. இந்துக்களைப் பற்றி உள்ளூர்க்காரன் கவலைப்பட்டால் அவன் மதவாதி !
ஓருவரின் உண்மையான மதத்தை மாற்ற நினைப்பது என்பதே உண்மையான ஆன்மீகத்திற்குப் புறம்பான ஒரு கேவலச் செயல். அதிலும் இது போன்ற மற்ற மதத்தின் மீது சேற்றை வாரிப் பூசும் செயல்களை என்ன சொல்ல?
சிறுபான்மை இனம் என்று தங்களை சொல்லிக்கொண்டு, பெரும்பான்மை மக்கள் எல்லோரும் தங்களை பொத்திப் பாதுகாக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் பெரும்பான்மையினர் மூக்கைச் சுரண்டி விளையாடி விட்டு, அவர்கள் மிகச் சிறிய அளவில் எதிர்வினை புரிந்தாலும் குய்யோ முறையோ என்று கூச்சல் போடுவதால் என்ன பயன் ?
இந்து தெய்வங்கள் மீது அவதூறு பேசுவது இது முதல் முறை இல்லை. நாடு முழுவதும் இது பல வருடங்களாக நடந்துக்கொண்டிருக்கிறது. தமிழகம் உட்பட..ஆனால் இவர்கள் என்னவோ ஒன்றும் அறியாத தங்களைத் தாக்கி விட்டதாக அலறுவது நல்ல காமெடி.
“மதச்சார்பின்மை என்பதும், மத நல்லிணக்கமும் ஒரு வழிப் பாதை அல்ல. நமக்கும் அதில் பங்கு இருக்கிறது” என்பதை மதமாற்ற மிஷனரிகள் புரிந்து கொள்ளும் வரை இந்த மாதிரி பிரச்சனைகளை நாடு சந்தித்துக் கொண்டுத்தான் இருக்கும் என்பது கசப்பான உன்மை.

No comments:
Post a Comment